ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் 47 பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் 47 பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு
X

வேட்பாளர் பட்டியல் வெளியீடு (பைல் படம்).

பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. வேட்புமனு தாக்கல் ஜனவரி 10ம் தேதி தொடங்கி 17ம் தேதி முடிவடைந்தது. இந்த இடைத்தேர்தலில் திமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உட்பட 58 பேர் போட்டியிட வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

இதில், 3 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 55 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தன. வேட்புமனுக்களைத் திரும்ப பெறுவதற்கான கடைசி நாளான இன்று (ஜன.20ம் தேதி) 8 சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர்.

இதனைத் தொடர்ந்து, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 47 பேர் போட்டியிடுவார்கள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, வேட்பாளர்களுக்கான சின்னம் ஒதுக்கீடு செய்யும் பணி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் மரு.மனிஷ்.என் தலைமையில் நடைபெற்று வருகிறது.

ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் நடந்து வரும் சின்னம் ஒதுக்கும் பணியில், இடைத்தேர்தலில் போட்டியிடும் 47 வேட்பாளர்களும் கலந்து கொண்டுள்ளனர். திமுக வேட்பாளர் சந்திரகுமாருக்கு உதயசூரியன் சின்னமும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமிக்கு மைக் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கும் பணி நடந்து வருகிறது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா