பொங்கல் தொடர் விடுமுறையை ஒட்டி கொடிவேரி‌ அணையில் குவிந்த பொதுமக்கள்!

பொங்கல் தொடர் விடுமுறையை ஒட்டி கொடிவேரி‌ அணையில் குவிந்த பொதுமக்கள்!
X
பொங்கல் தொடர் விடுமுறை என்பதால் கொடிவேரி அணைக்கு சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் கொடிவேரி அணையில் குவிந்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தளங்களில் ஒன்றான கொடிவேரி அணை. இந்த அணையில் நீர் அருவிபோல் கொட்டுவதால், ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி கோவை, திருப்பூர், சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலிருந்தும், கர்நாடக மாநிலம் பெங்களூர், மைசூரிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருவது வழக்கம்.

பொங்கல் தொடர் விடுமுறை - பயணிகள் குடும்பத்துடன் குவிந்தனர்

தற்போது பொங்கல் தொடர் விடுமுறை என்பதால் கொடிவேரி அணைக்கு சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் கொடிவேரி அணையில் குவிந்தனர்.

அருவிபோல் கொட்டும் தண்ணீரில் குளித்தும், அணையின் மேல் பகுதியில் பரிசல் பயணம் மேற்கொண்டும், அணையின் கீழ் பகுதியில் கடற்கரைபோன்ற மணல் பகுதியில் அமர்ந்து, அங்கு விற்பனை செய்யப்படும் சுவையான மீன் வகைகளை சாப்பிட்டும், அங்கு அமைக்கப்பட்டுள்ள பூங்காவில் விளையாடியும் உற்சாகமாக விடுமுறையை கழித்தனர்.

குறைந்த செலவில் குடும்பத்துடன் விடுமுறையை கழிக்கும் சிறந்த இடம்

குறைந்த செலவில் இங்கு விடுமுறையை குடும்பத்துடன் கழிக்க முடியும் என்பதால் இங்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

பாதுகாப்பு நடவடிக்கைகள் - தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதி

கொடிவேரி அணைக்கு சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்ததைத் தொடர்ந்து அணைக்கு வருபவர்கள் தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்பட்டனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்