6 மாதத்திற்கு பின் மேட்டூர் கிழக்குக்கரை வாய்க்காலில் நிறுத்தப்பட்ட தண்ணீர்

குமாரபாளையம் பகுதியில் 6 மாதத்திற்கு பின் மேட்டூர் கிழக்குக்கரை வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்டது.

குமாரபாளையம் பகுதியில் 6 மாதத்திற்கு பின் மேட்டூர் கிழக்குக்கரை வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்டது.

குமாரபாளையம் பகுதியில் மேட்டூர் கிழக்கு கரை வாய்க்காலில் கடந்த ஜூலை மாதம், மேட்டூர் அணை நிரம்பியதையடுத்து தண்ணீர் திறக்கப்பட்டது. அது முதல் நேற்றுமுன்தினம் வரை தண்ணீர் வந்துகொண்டிருந்தது. இதனால் விவசாயிகள் தங்கள் வயல்களில் நெல் உள்ளிட்ட பல்வேறு பயிர்களை பயிரிட்டனர். ஆறு மாத காலமாக வந்த தண்ணீரால், தட்டான்குட்டை ஊராட்சி, குப்பாண்டபாளையம் ஊராட்சி உள்ளிட்ட பகுதியில் நிலத்தடி நீர் அதிகரித்தது. போர்வெல்களில் தண்ணீர் நிறைந்து இருந்தது. கால்நடைகளுக்கு போதுமான குடிநீர் கிடைத்தது. விவசாயிகள் இதனால் மகிழ்ச்சியடைந்தனர். வழக்கமாக ஆறு மாத காலத்திற்கு பின் தண்ணீர் நிறுத்தப்படுவது வழக்கம். அதன்படி நேற்று மேட்டூர் கிழக்குக்கரை வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்டது. இனி போர்வெல்களில் தண்ணீர் குறைந்து, தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகி வருகிறது. இதனால் விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்கள் செய்வதறியாது உள்ளனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!