ஜல்லிக்கட்டு வாடிவாசல் கால்கோள் விழா

ஜல்லிக்கட்டு வாடிவாசல் கால்கோள் விழா
X
குமாரபாளையத்தில் பிப்ரவரி 2ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள நிலையில் வாடிவாசல் கால் கோள் விழா நடந்தது.

ஜல்லிக்கட்டு வாடிவாசல் கால்கோள் விழா

குமாரபாளையத்தில் பிப்ரவரி 2ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள நிலையில் வாடிவாசல் கால் கோள் விழா நடந்தது.

குமாரபாளையத்தில் கடந்த பல ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை, சில நாட்கள் முன்பு, திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. வசந்தி, டி.எஸ்.பி. இமயவரம்பன், இன்ஸ்பெக்டர் தவமணி, தாசில்தார் சிவகுமார் உள்ளிட்ட பலர் ஆய்வு செய்து, வாடிவாசல் அமைக்கும் இடம், மாடுகள் கட்டப்படும் இடம், வரிசையாக மாடுகள் கொண்டு செல்லும் இடம், மாடுகள் வெளியேறும் இடம், பார்வையாளர்கள் அமரும் இடம், சிறப்பு அழைப்பாளர்கள் அமரும் இடம், கால்நடைத்துறை டாக்டர்கள் அறை, மருத்துவ முதலுதவி முகாம் அமைக்கும் இடம், வாகனங்கள் நிறுத்தும் இடம் உள்ளிட்ட இடம் அமைப்பது குறித்து, விழாக்குழுவினருக்கு ஆலோசனைகள் கூறினர். குமாரபாளையம் ஜல்லிக்கட்டு பேரவை சார்பாக, 9ஆம் ஆண்டாக வருகின்ற பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வாடிவாசல் அமைக்க கால்கோல் விழா, குமாரபாளையம் ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் வினோத்குமார் தலைமையில் நடந்தது. செயலர் ராஜ்குமார் வரவேற்றார். இதில் குமாரபாளையம் நகர மன்ற தலைவர் விஜய கண்ணன், பள்ளிபாளையம் நகர மன்ற தலைவர் செல்வராஜ், குமாரபாளையம் நகர மன்ற துணைத்தலைவர் வெங்கடேசன், கவுன்சிலர் அழகேசன், முன்னாள் நகர தி.மு.க. செயலர் செல்வம், பல்லக்காபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மற்றும் தி.மு.க. ஒன்றிய செயலர் நாச்சிமுத்து, உள்ளிட்டோர் பங்கேற்று, நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர் இதில் ஜல்லிக்கட்டு பேரவை அமைப்பினர் ரவி, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

படவிளக்கம் :

குமாரபாளையத்தில் பிப்ரவரி 2ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள நிலையில் வாடிவாசல் கால் கோள் விழா நடந்தது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!