இராமேஸ்வரத்தில் வைகாசி மாத வளர்பிறை பிரதோஷம்

இராமேஸ்வரத்தில் வைகாசி மாத வளர்பிறை பிரதோஷம்
X

பைல் படம்.

இராமேஸ்வரத்தில் வைகாசி மாத வளர்பிறை பிரதோஷம். சிவபெருமான் மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை.

இராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோயில் உபக்கோவிலான ஸ்ரீரகுநாதேஸ்வரர் கோவிலில் வைகாசி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சிவன் மற்றும் நந்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

உலகப் பிரசித்தி பெற்ற இராமேஸ்வரம் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில் உப கோவில்களில் ஒன்றான நூற்றாண்டு பழமை வாய்ந்த மீனாக்ஷி அம்பாள் சமேத ரகுநாதேஷ்வரர் ஆலயத்தில் இன்று வைகாசி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு திருக்கோயிலில் உள்ள ரகுநாதேஷ்வரருக்கும், நந்தி பகவானுக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பால், தயிர், நெய், வாசனை திரவியங்கள் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது. தோஷங்கள் நீங்கும் பிரதோஷம் என்பதால் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்