இடைத்தேர்தல்: பிப்ரவரி 5ம் தேதி ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு பொது விடுமுறை

இடைத்தேர்தல்: பிப்ரவரி 5ம் தேதி ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு பொது விடுமுறை
X

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அன்று பொது விடுமுறை அறிவிப்பு.

இடைத்தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு வரும் பிப்ரவரி 5ம் தேதி ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இடைத்தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு வரும் பிப்ரவரி 5ம் தேதி ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:-

மத்திய உள் விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் அறிவிப்பாணைப்படி, இடைத்தேர்தல் நடைபெறும் பிப்ரவரி 5ம் தேதியன்று ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பொது விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

அதன்படி, அந்தத் தொகுதியில் உள்ள அரசின் தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்கள், அனைத்து கல்வி நிறுவனங்கள், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்புகளின் அலுவலகங்கள் அனைத்தும் பிப்ரவரி 5ம் தேதி மூடப்பட வேண்டும்.

அந்த தொகுதி அமைந்துள்ள ஈரோடு மாவட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் பணியாற்றும், ஈரோடு கிழக்குத் தொகுதி வாக்காளர்களாக உள்ள பணியாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
Similar Posts
ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அதிரடி மாற்றம்
ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஜன.23) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிப்பு
இடைத்தேர்தல்: பிப்ரவரி 5ம் தேதி ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு பொது விடுமுறை
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் 46 வேட்பாளர்களின் சின்னங்கள்
அந்தியூர் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் செவ்வாழை தார் ஒன்று ரூ.1,750க்கு விற்பனை
ஈரோடு: மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சியில் காசநோய், புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம்
பெருந்துறையில் புகையிலை பொருட்கள் விற்ற 2 கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்
பவானி அருகே மங்களகிரி பெருமாள் கோயில் நிலத்தை அளவீடு செய்ய மக்கள் எதிா்ப்பு!
ஈரோடு நெடுஞ்சாலையில் பரபரப்பு: கரும்பை தேடி லாரிகளை வழிமறித்த யானை
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 94 அடியாக குறைவு
ஈரோட்டில் நான்கு அமைச்சர்கள் தலைமையில் தி.மு.க பூத் நிர்வாகிகள் மாநாடு ,மெகா விருந்துடன்  நிறைவு
சித்தோட்டில் காசநோய் இல்லா ஈரோடு விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம்
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்