பருவ நிலை மாற்றத்தால் வரத்து குறைந்து விலை அதிகரிப்பு..! தேங்காய், கொப்பரைக்கு ஊக்கத்தொகை வழங்க யோசனை...!

பருவ நிலை மாற்றத்தால் வரத்து குறைந்து விலை அதிகரிப்பு..! தேங்காய், கொப்பரைக்கு ஊக்கத்தொகை வழங்க யோசனை...!
X
பருவ நிலை மாற்றத்தால் வரத்து குறைந்து விலை அதிகரிப்பு தேங்காய், கொப்பரைக்கு ஊக்கத்தொகை வழங்க யோசனை அதை பற்றி இப்பதிவில் காணலாம்.

தமிழகத்தில் ஈரோடு, திருப்பூர், கோவை, தஞ்சை, திருவாரூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் அதிகமாகவும், கரூர், திண்டுக்கல், திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி, நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் பகுதியாகவும் தென்னை பயிரிடுகின்றனர். ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்டத்தில் சொசைட்டி மற்றும் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களாக பெருந்துறை, அவல்பூந்துறை, எழுமாத்துார், மொடக்குறிச்சி, சிவகிரி, காங்கேயம், வெள்ளகோவில் உட்பட, 15க்கும் மேற்பட்ட இடங்களில் தேங்காய், கொப்பரை தேங்காய் அதிகமாக விற்பனையாகிறது.

பருவ நிலை மாற்றத்தால் உற்பத்தி பாதிப்பு

கடந்த சில ஆண்டுகளாக, பருவ நிலை மாற்றத்தால், தேங்காய் உற்பத்தி குறைந்தது. வடமாநிலங்களில் அதிகமாக தேங்காயை உணவுக்கு பயன்படுத்துவதும், எண்ணெய் கொள்முதல் அதிகரிப்பாலும், கொப்பரை தேங்காய் தேவை அதிகரித்துள்ளதாலும், தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய் விலை அதிகரித்து வருகிறது.

விவசாயிகள் சங்க தலைவரின் கருத்து

இது குறித்து, தமிழக விவசாயிகள் சங்க ஈரோடு மாவட்ட தலைவர் பெரியசாமி கூறியதாவது: பருவ நிலை மாறியதால், மரத்தில் காய் கட்டவில்லை. முன்பு மரத்துக்கு, 200 முதல், 300 காய் காய்த்த நிலையில் தற்போது, 100 முதல், 150 காய் காய்க்கிறது. இரண்டு பெரிய காய் - 1 கிலோ எடை இருக்கும். மூன்று சிறிய காய் - 1 கிலோ எடை வரும். தற்போது, 4, 5 காய் வைத்தால்தான், 1 கிலோ எடை நிற்கிறது.

காய்கள் எடை குறைந்ததால் விவசாயிகளுக்கு இழப்பு

தென்னையில், 90 நாட்களுக்கு ஒரு முறை காய் பிடிக்கும். ஒரு மரத்தை, 1,000 ரூபாய்க்கு ஏலமெடுத்து காய் பறிப்பர். தற்போது, 700 ரூபாய்க்குள் கேட்கின்றனர். அதிகமாக காய் காய்த்து, விலையும் அதிகம் இருந்தால், விவசாயிகள் லாபம் பெறுவர். தற்போது காய் குறைவாக காய்ப்பதுடன், எடை இல்லாமல் உள்ளதால் லாபமில்லை.

நாபெட் மூலம் குறுகிய கால கொள்முதல்

'நாபெட்' (நேஷனல் அக்ரிகல்சுரல் கோ-ஆப்ரேட்டிவ் மார்க்கெட்டிங் பெடரேஷன் ஆப் இந்தியா) குறிப்பிட்ட மாதங்கள் மட்டும், அரவை கொப்பரை ஒரு கிலோ, 111.60 ரூபாய்க்கும், பந்து கொப்பரையை, 120 ரூபாய்க்கும் கொள்முதல் செய்கிறது. அவர்கள் குறிப்பிடும் தரத்தில் குறைந்த அளவே விற்க இயலும்.

தென்னை, கொப்பரைக்கு ஊக்கத் தொகை தேவை

கொப்பரை தேங்காய்க்கும், தென்னை வளர்ப்புக்கும் அரசு சார்பில் ஊக்கத்தொகை வழங்கலாம். 'நாபெட்' ஆண்டு முழுவதும் கொள்முதல் செய்தால், தரமான கொப்பரைக்கு கூடுதல் விலை கிடைக்க வாய்ப்பாகும்.

கொப்பரை தேங்காய் கொள்முதல் அதிகாரிகளின் தகவல்

செப்., முதல் நவ., வரை தேங்காய் சீசன். மீண்டும் பிப்., முதல், மூன்று மாதம் சீசனாகும். இந்தாண்டு தேங்காய், கொப்பரை வரத்தும், காய் அளவும் குறைந்துள்ளது. முன்பு ஒரு பெரிய காய், 400 முதல், 600 கிராமும், சிறிய காய், 200 முதல், 300 கிராமும் இருக்கும். தற்போது, பாதி எடைதான் உள்ளது.

முதல் தரம், இரண்டாம் தரம் என பிரித்த கொள்முதல்

கொப்பரை தேங்காயை, முதல், இரண்டாம் தரம் என பிரித்து கொள்முதல் செய்கிறோம். முதல் தரம் என்பது, பெரிய, தடிமனான, தரமான கொப்பரை தேங்காயாகும். 'நல்ல பிரவுன்' நிறத்தில் இருக்கும். தேங்காயை உடைத்து உலர வைத்தால், வெளிப்புறம் சுருக்கம் இருக்கக்கூடாது. உட்புறம் மஞ்சள் நிறம் படிதல், அழுகல் இருக்கக்கூடாது.

இரண்டாம் தரக் கொப்பரையால் எண்ணெய் தர குறைவு

இரண்டாம் தரத்தில், அழுகல், பூஞ்சானம் பற்றிய, தேங்காய் தொட்டி ஒட்டிய பருப்பாகும். இதில் எண்ணெய் எடுத்தால் சிக்கு வாடை வரும். உதாரணமாக பெருந்துறை சொசைட்டியில் புதன் மற்றும் சனிக்கிழமை கொப்பரை தேங்காய் ஏலம் நடக்கும். சராசரியாக, 3,000 முதல், 5,500 மூட்டை வரத்தாகும். இது, 1.50 லட்சம் கிலோ முதல், 2.25 லட்சம் கிலோ வரையாகும். முதல் தரம் 40 முதல், 45 சதவீதமும், இரண்டாம் தரம் மீதமுமாக இருக்கும்.

வியாபாரிகளே முக்கிய வாடிக்கையாளர்கள்

கொப்பரை விலை என்பது, கொப்பரை தேங்காய் வரத்து, தேங்காய் எண்ணெய் உற்பத்தி மற்றும் தேவைக்கு ஏற்ப மாறும். கொப்பரை தேங்காயை அரசு கொள்முதல் செய்து, பாதுகாத்து யாரிடமும் விற்க இயலாது. எண்ணெய் ஆலைகள், மருத்துவ பயன்பாடு, வியாபாரிகள் மட்டுமே வாங்குவர்.

ஊக்கத் தொகை அறிவிப்பால் விவசாயிகள் பயன்

கொப்பரை தேங்காயை பொறுத்தவரை, மிக மோசமானவை தவிர, மற்றவை முழுமையாக விற்பனையாகும். ஊக்கத்தொகையை அரசு அறிவித்தால், விவசாயிகளுக்கு கூடுதல் விலை அல்லது லாபம் கிடைக்கும்.

அவல்பூந்துறையில் கொப்பரை தேங்காய் விற்பனை

ஈரோடு மாவட்டம், அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு நேற்று, 16 மூட்டைகளில் கொப்பரை தேங்காயை விற்பனைக்கு கொண்டு வந்தனர். முதல் தரம் ஒரு கிலோ, 123.29 முதல், 142.29 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 288 கிலோ எடை கொண்ட கொப்பரை தேங்காய், 37 ஆயிரத்து, 233 ரூபாய்க்கு விற்பனையானது.

Tags

Next Story
Similar Posts
பெருந்துறை நல்லாம்பட்டியில் ரூ.2.11 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பள்ளி கட்டிடத்தினை திறந்து வைத்த அமைச்சர்
நம்பியூர் ஒன்றியத்தில் ரூ.60 லட்சம் மதிப்பில் வளர்ச்சித் திட்டப் பணிகள்: எம்எல்ஏ துவக்கி வைப்பு
ஈரோடு மருத்துவர் கே.எம்.அபுல்ஹசனுக்கு இந்திய மருத்துவ சங்கத்தின் சிறந்த மாநிலத் தலைவர் விருது
சத்தியமங்கலம் நவ பாரத் ரேங்க் பள்ளி ஆண்டு விழா: திரைப்பட இயக்குநர் பங்கேற்பு
ஈரோட்டில் ஓட்டலில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கடும் வயிற்று வலி
ஈரோட்டில் டிரைவருக்கு திடீர் வலிப்பு: டீக்கடைக்குள் புகுந்த அரசு பேருந்து
பவானி அருகே புடவை வியாபாரி மர்ம சாவில் திடீர் திருப்பம்: நகைக்காக கொலை செய்த பள்ளி மாணவன் உள்பட 3 பேர் கைது
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு
செல்போன் திருடனை மடக்கிப்பிடித்த சத்தியமங்கலம் பொதுமக்கள்!
ஈரோட்டில் எஸ்சி, எஸ்டி அனைத்து பணியாளர்கள் நலச் சங்கத்தினர் அமைச்சர் மதிவேந்தனிடம் மனு
தொலைந்த கைபேசிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு - ஈரோடு காவல்துறையின் சிறப்பு முயற்சி
பருவ நிலை மாற்றத்தால் வரத்து குறைந்து விலை அதிகரிப்பு..! தேங்காய், கொப்பரைக்கு ஊக்கத்தொகை வழங்க யோசனை...!
ஆப்பக்கூடலில் சாலை விரிவாக்கப் பணியால் அந்தியூர் சாலை துண்டிப்பு: 6 கி.மீ சுற்றி செல்லும் வாகன ஓட்டிகள்
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு