புஞ்சைபுளியம்பட்டி சந்தையில் வசூல் வெள்ளம்: ரூ.1 கோடிக்கு கால்நடை விற்பனை!
ஈரோடு : புஞ்சைபுளியம்பட்டி சந்தையில் ரூ. 1 கோடிக்கு கால்நடைகள் விற்பனை ஆனது. புஞ்சைபுளியம்பட்டி கால்நடை சந்தை வாரந்தோறும் கூடுகிறது. அதன்படி கூடிய சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வாங்க விற்க வந்தனர்.
கால்நடைகளின் விவரங்கள்
சந்தையில் 12 எருமைகள், 110 கலப்பின மாடுகள், 95 கன்றுகள், 50 ஜெர்சி ரக மாடுகள் மற்றும் சிந்து, நாட்டு மாடு உள்ளிட்ட வகைகள் கொண்டு வரப்பட்டன.
கால்நடைகளின் விலை நிலவரம்
எருமை மாடு: ரூ. 17,000 - ரூ. 21,000
கலப்பின மாடு: ரூ. 16,000 - ரூ. 27,000
ஜெர்சி மாடு: ரூ. 18,000 - ரூ. 30,000
சிந்து மாடு: ரூ. 13,000 - ரூ. 30,000
நாட்டு மாடு: ரூ. 70,000 - ரூ. 75,000
வளர்ப்பு கன்று: ரூ. 7,000 - ரூ. 10,000
ஆடுகளின் விவரங்கள்
500-க்கும் மேற்பட்ட ஆடுகள் பல்வேறு பகுதிகளில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. வெள்ளாடு ஒன்று ரூ. 9,000 வரையும், செம்மறி ஆடு ஒன்று ரூ. 8,000 வரையும் விற்பனையானது.
மொத்த விற்பனை
ஆடுகள் ரூ. 30 லட்சத்துக்கும், மாடுகள் ரூ. 70 லட்சத்துக்கும் என மொத்தம் ரூ. 1 கோடிக்கு கால்நடைகள் விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu