இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!

இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!
X
நாமக்கல் ஆட்சியா் அலுவலக நுழைவாயில் பகுதி, இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறியுள்ளதால் பொதுமக்கள் அமர முடியாமல் சிரமப்படுகின்றனா்.

நாமக்கல் : நாமக்கல் ஆட்சியர் அலுவலக நுழைவாயில் பகுதி, இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறியுள்ளதால் பொதுமக்கள் அமர முடியாமல் சிரமப்படுகின்றனர்.

புதிய பேருந்து நிலையம்

நாமக்கல் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து இயங்கிய புகர் பேருந்துகள் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்ட பிறகு அங்கிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும் செல்கின்றன. நாமக்கல் நகரைச் சுற்றியுள்ள அரசு ஊழியர்கள் பலர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பணியாற்றி வருகின்றனர்.

பழைய பேருந்து நிலையம்

புதிய பேருந்து நிலையம் திறக்கப்படுவதற்கு முன்பு பழைய பேருந்து நிலையத்தில் உள்ள இரு சக்கர வாகன நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்தி விட்டு பலர் செல்வர். தற்போது 6 கி.மீ. தூரத்தில் புதிய பேருந்து நிலையம் உள்ளதால், அங்கு செல்வதற்குப் பதிலாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு, திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அவர்கள் சென்று வருகின்றனர்.

பொதுமக்கள் சிரமம்

இதனால் ஆட்சியர் அலுவலக நுழைவாயில், இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் போல மாறிவிட்டது. இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வரும் பொதுமக்கள் ஓய்வுக்காக அமருவதற்கு இடமில்லாமல் சிரமப்படுகின்றனர்.

பொதுமக்கள் சந்திக்கும் சிக்கல்கள்

  • ஓய்வுக்கு அமர இடமின்மை
  • போக்குவரத்து நெரிசல்
  • அலுவலக அழகு மறைந்து நிற்கும்

போக்குவரத்து இடையூறு

அதுமட்டுமின்றி, அரசுத் துறை வாகனங்கள், உயர் அதிகாரிகள் வாகனங்கள் செல்லும்போது தேவையற்ற போக்குவரத்து இடையூறும் ஏற்படுகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அழகிய தோற்றம் வாகனங்களால் மறைந்து நிற்கிறது.

தீர்வு கோரும் தன்னார்வலர்கள்

வெளியூருக்கு பணிக்குச் செல்லும் அரசு அலுவலர்கள் வாகனங்களை நிறுத்த வேண்டுமெனில், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தனியாக ஒரு இடத்தை மாவட்ட நிர்வாகம் ஒதுக்கி கொடுக்கலாம். அதுமட்டுமின்றி, குறைவான கட்டணம் நிர்ணயித்து அவர்களிடம் வசூல் செய்யலாம் என்பது தன்னார்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags

Next Story
Similar Posts
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!
பரமத்தி அருகே கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு
புதுச்சத்திரம் பகுதியில் ரூ. 1.23 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள்: கலெக்டர் ஆய்வு
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
நாமக்கல் : ரூ.140 கோடி செலவில் போதமலையில் புதிய சாலை - 150 ஆண்டுகால பிரச்னைக்கு தீர்வு!
தேசிய சிலம்பம் போட்டியில் வேளாளர் வித்யாலயா அசத்தல்: ஒன்பது தங்கம் வெற்றி
விவசாயிகளுக்கு மானிய விலையில் செல்போன் மூலம் மோட்டார் பம்பம் செட் இயக்கும் கருவி -  விண்ணப்பங்கள் வரவேற்பு
அகில இந்திய வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவருக்கு கலெக்டர் பாராட்டு
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா
நாமக்கல் ஒன்றியத்தில் 81 பள்ளி செல்லா குழந்தைகள் கண்டுபிடிப்பு: மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை
வாடிக்கையாளர் ஆன்லைனில் இழந்த பணத்தை திருப்பி வழங்க, வங்கிக்கு நுகர்வோர் கோர்ட் உத்தரவு
ஈரோடு இடைத்தேர்தலில் 10:30 மணிக்கு வெளியான வேட்பாளர் பட்டியல்: கசிந்த சிக்கல்கள்
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!