சீனாவில் பள்ளிக்குள் புகுந்து குழந்தைகளை கத்தியால் குத்திய பெண்
சீனாவில் பள்ளிக்குள் புகுந்து குழந்தைகளை கத்தியால் குத்திய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
சீனாவில் பள்ளிக்குள் புகுந்து சரமாரியாக குழந்தைகளை கத்தியல் குத்திய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
சீனாவின் ஜியான்சி மாகாணம் குவிசி நகரில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 200க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமிகள் கல்வி பயின்று வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று மதியம் வழக்கம் போல அந்த பள்ளி இயங்கி வந்தது. அப்போது சந்தேகத்தை கிளப்பும் வகையில் பெண் ஒருவர் காவலாளிகளின் எச்சரிக்கையை மீறி பள்ளி வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்தாள். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு வந்துள்ள அந்த பெண் வகுப்பறைகளுக்குள் புகுந்து சிறுவர் சிறுமிகளை சரமாரியாக குத்தினார். இந்த தாக்குதல் காரணமாக சிறுவர்கள் பயத்தில் அலற தொடங்கினர். இதனால் பள்ளி வளாகத்திற்குள் பீதியும் பதற்றமுமான சூழல் நிலவியது .
பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய பெண்ணை தடுக்க காவலாளிகள் முயன்றபோது அவர்கள் மீதும் அந்த பெண் கத்தியால் குத்தி கண்மூடித்தனமாக தாக்கினார். இந்த கோர சம்பவத்தில் முகத்தில் கத்தியால் கிழிக்கப்பட்டு இரண்டு ஆசிரியைகள் ரத்த வளத்தில் துடிதுடித்து இறந்தனர். சிறுவர்கள் உட்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
இது பற்றிய தகவல் அறிந்த போலீசார் பள்ளிக்கூடத்திற்கு விரைந்து வந்தனர் பள்ளி வளாகத்தை சுற்றி வளைத்து அந்த பெண்ணை தங்களுடைய பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தனர். பின்னர் அவர்கள் தாக்குதல் நடத்திய 43 வயது பெண்ணை துப்பாக்கி முனையில் பிடித்து கைது செய்தனர்.
அதனை தொடர்ந்து படுகாயம் அடைந்த சிறுவர்கள், குழந்தைகளை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்க. அனுப்பி வைத்தனர் இந்த கத்திக்குத்து தாக்குதல் காரணமாக அந்த பள்ளியில் படித்து வரும் குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் குவிந்தனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சீனாவில் கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் அங்குள்ள பொதுமக்கள் மன அழுத்தத்தால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் கத்திக்குத்து உள்பட வன்முறை சம்பவங்கள் அங்கு தொடர்ந்து நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண் தான் இந்த செயலில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu